ஜோதிடம் பற்றிய முன்னுரை

ஜோதிட முன்னுரை

ஜோதிடம் எதிர்காலம் அறியும் ஒரு கலை என்பது பொதுவாக ஜோதிடத்தின் மீது ஆர்வம்உள்ள அனைவருக்கும் தெரிந்ததே.

ஒரு ஜாதகரின் கடந்த காலம் எப்படி இருந்தது நிகழ் காலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அவரது பிறந்த நாளன்று வானத்தில் இருந்த கிரகங்களின் நிலையையும் வலிமையையும் ராசி, லக்னம் மற்றும் இதர பதினொன்று பாவங்களின் வலிமையையும் (சுப,அசுப நிலை) கணக்கிட்டு கணித்து சொல்லமுடியும் என்பதே ஜோதிடசாஸ்திரம்.

எதிர்காலத்தை அறிந்து கொள்வதில் எல்லா மனிதர்களுக்கும் எப்பொழுதும் குதூகலம் நிச்சயம் உண்டு.அதனால்தான் எதிர்காலம் கணித்து பலன் சொல்லும் இந்த சாஸ்திரத்தின் மேல் பெரும்பாலானமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

கிரகங்கள் மனிதர்களின் மனதை ஆட்கொண்டு ஆசைகளை தூண்டி எண்ணங்களின் வழியாக செயல்களை செயல்படுத்து கின்றன.அந்த செயல்களின் நல்ல கெட்ட விளைவுகள் வாழ்க்கை நிகழ்வுகளில்  பிரதிபலிக்கின்றது என்பது ஜோதிட அடிப்படை.அந்த நிகழ்வுகளே தொழில் லாபம்,நஸ்டம்,சுகம்,துக்கம்,சந்தோசம்,மனஅழுத்தம் என மன உணர்வுகள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன.

ஒரு ஜாதகரின் பிறப்பு ஜாதகத்தில் எதிர்கால பலன் அறிய லக்னம், இதர பதினொன்று பாவங்கள்,அதில் கிரகங்கள் அமைந்த வலிமை,ராசி மற்றும் நடந்துகொண்டிருக்கும் தசா புக்தி முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராசி ஒரு ஜாதகரின் மனம், உடல் நிலையை குறிக்கிறது.லக்கினம் அவரின் உயிர்,சிந்தனை,செயல்திறனை குறிக்கிறது.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையாக இருப்பது நல்லது.குறிப்பாக குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,தனி(அசுபருடன் சேராத)புதன் போன்ற சுப கிரகங்கள் வலிமையாக இருப்பது மிகவும்நல்லது.

ராகு,கேது,சனி,செவ்வாய் போன்ற அசுபகிரகங்கள் வலுக்குறைந்திருப்பது நல்லது.அதே நிலையில் அவை சுப கிரக தொடர்பை பெற்றிருப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தசா புக்தி நடத்தும் கிரகங்கள் மேலே சொல்லப்பட்ட வகையில் வலுவாக இருந்துதசை நடத்தும் காலம் ஜாதகருக்கு மிகசிறந்த நற்பலன்கள் உண்டாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் முன்னுக்குப் பின் முரணான விதிகள் பல உண்டு. முரண்பட்ட விதிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி பலன் சொல்வது ஜோதிடருக்கு சவாலான ஒன்று. ஞானம் மற்றும் அனுபவம் இந்த சவாலை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும். அதேபோல விதிவிலக்குகளும் அனேகம் உண்டு. விதிவிலக்குகளை சரியான நேரத்திலே பயன்படுத்தும் அனுபவம்,ஞானம் ஜோதிடருக்கு அவசியம் தேவை.

Comments

Popular posts from this blog

ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்

திருமணப் பொருத்தம்