Posts

Showing posts from February, 2026
  பஞ்சமகா புருஷ யோகங்கள் ஜோதிடத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக அதிர்ஷ்டம் மிகுந்ததாக கருதப்படுகின்றன. ஒரு ஜாதகத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து பஞ்சபூத கோள்கள் தங்களுக்குரிய ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் அமர்ந்து, அந்த வீடு லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரங்களில் (1, 4, 7, 10) இருக்கும்போது இந்த யோகங்கள் உண்டாகின்றன என ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இந்த ஐந்து கோள்கள் தவிர்த்து இதர ஒளிக்கோள்களான சூரியன் சந்திரன் மற்றும் இருள் கோள்களான ராகு கேது இவைகளுக்கு இந்த யோகம் தரும் அமைப்பு இல்லை. சந்திர கேந்திரத்தில் இந்த யோகம் அமைவதை விட லக்ன கேந்திரத்தில் இந்த யோகம் அமைவது மிக வலிமையாக இருக்கும். நற்பலன்களைத் தரும். ​இந்த ஐந்து யோகங்களைப் பற்றி தனித்தனியே சுருக்கமாக பார்க்கலாம். 1. ருசக யோகம் (செவ்வாய்) ​செவ்வாய் தனது சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் அல்லது உச்ச வீடான மகரத்தில் இருந்து (லக்னம்/ராசிக்கு) கேந்திரம் ஏறினால் இந்த யோகம் அமையும். ​இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் அதிக உடல் வலிமை, தைரியம், தலைமைப் பண்பு மற்றும் நிர்வாகத் திறன் கொ...

திருமணப் பொருத்தம்

 நட்சத்திரப்படி திருமண பொருத்தம் பார்ப்பது சரியா? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சொல்வது வழக்கம். ஒரு ஆணும் பெண்ணும் சரியான பருவத்தில், சட்டப்படி  அல்லது சாஸ்திர சம்பிரதாயப்படி அல்லது குல வழக்கப்படி  முறையான கணவன் மனைவி எனும் உறவில் இணைந்து குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது திருமணம். மேற்கத்திய கலாச்சார முறையில் ஆணும் பெண்ணும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்துகொண்டு மனதிற்கு பிடித்து இருக்கும் காலம் வரை சேர்ந்து வாழ்வதும்,கருத்து வேறுபாடுகள் வந்தால் விவாகரத்து செய்து பிரிந்து வேறு துணை தேடி மணம் முடித்துக் கொள்வதும் சகஜம். ஆனால் இந்திய கலாச்சார முறை இதற்கு முற்றிலும் மாறுபட்டது, வேறுபட்டது. ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்வது இந்திய கலாச்சார முறை. ஒரு முறை திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் எத்தனை கஷ்டங்கள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அத்தனையையும் சகித்து சமாளித்து, ஆயுள் கால கடைசி நாள்வரை ஒன்றாக இணைந்து வாழ்ந்து இறப்பதை வலியுறுத்துவது இந்திய கலாச்சாரம் .இந்திய பெண்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர். தவிர்க்கமுடியாத மிகச்சில சந்தர்ப்ப...

வாக்கியமா திருக்கணிதமா? எது சிறந்த துல்லிய பஞ்சாங்கம்?

ஜோதிட உலகில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் முக்கியமான தலைப்பு இந்த வாக்கியம் மற்றும் திருக்கணிதம் பஞ்சாங்கங்களுக்கு இடையிலான வேறுபாடுதான். பெரும்பாலான ஜோதிடர்களுக்குள் ஜோதிட சமூகத்திற்குள் எது சிறந்தது? துல்லியமானது இதுவா அதுவா? எனும் விவாதம் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளது. இவை இரண்டும் வானத்தில் சுழன்று கொண்டிருக்கிற கிரக நிலைகளை,ஒவ்வொரு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கிரக நகர்வுகளை கணக்கீடு செய்து அட்டவனை படுத்தப்பட்ட கால கையேடு ஆகும்.  இவை இரண்டிற்கும் இடையில் பல ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. அவைகளைப் பார்க்கலாம். ​வாக்கிய பஞ்சாங்கம்: இது மிகவும் பழமையானது. "ரிஷிகளின் வாக்கு" (வாக்கியம்) என்பதை அடிப்படையாகக் கொண்டது. சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களைத் தழுவி, கணக்கீடுகளை எளிமைப்படுத்திய சூத்திரங்களின் அடிப்படையில் இது கணிக்கப்படுகிறது. ​திருக்கணித பஞ்சாங்கம்: "திரு" என்றால் திருத்தப்பட்ட என்று பொருள். நவீன வானியல் கருவிகள் மற்றும் கணித முறைகளைப் பயன்படுத்தி, கிரகங்களின் தற்போதைய துல்லியமான நிலையை அப்படியே கணக்கிடும் முறை இது. ​ஒற்றுமைகள்: ​இரண்டு பஞ்சாங்கங்களும் சி...